Wednesday, April 1, 2009

பிரதோஷம்

சிவனாரின் திருக்கண்ணிற் குருதி தென்பட்டமாத்திரமே, தன்னிருகண்ணையும் பெயர்த்தெடுத்து உறுப்புதானம் செய்திட துணிந்த கண்ணப்பநாயனார் அறியாமையாற் பன்றியின் புலாலை ஈசனுக்குப் படைத்திருந்தாலும், அவனது ஒப்பற்ற சிவபக்தியினை மட்டுமே கண்டு மனங்குளிர்ந்திட்ட பரமன் அதனை உலகமறிய செய்தார் ஊரார் திகைக்கும் வண்ணம்.  

மானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன் தேவேந்திரன் வரையிலாக அனைவரும் சிவவழிபாடினாலே மங்கா புகழ் எய்துள்ளனர். இத்தகைய சிறப்பிற்குரிய சிவவழிபாடுகளில் தலையாயதென சித்தர் பெருமக்களால் போற்றப்படும் பிரதோஷ வழிபாட்டு தோன்றலின் கரணியத்தை யிங்கு காண்போம்.

துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை யிழந்த இந்திரன், தேவகுருவின் ஆலோசனையின்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம், பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்க திட்டமிட்டான். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென யறிந்த தேவேந்திரன், தனது குல எதிரியென்றும் பாராமற் அசுர பலத்தையும் நாடினான். பாற்கடலை கடையத் துணைப்புரிவதாற் என்றும் மரணயெய்யா நிலைதர வல்ல அமிழ்தத்தில் தனக்கொர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள்.

பாற்கடலில் பள்ளிகொணடருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்ததையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார். வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தர மலையை மத்தாக்கி, மலை கடலிலமிழா வண்ணம் கூர்மவதார கடவுள் தாங்கியபடி, தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டனர். ஆனால் மலைமத்தோ அசைவேணாவென்று அடம்பிடித்தது.

இன்னும் பலவான்கள் தேவையெனயறிந்த இந்திரன், இராவணினிடமே மல்யுத்தம் செய்த சக்திசாலிகளாகிய ஆயிரங்கரங்களையுடைய கார்த்தவீரியார்ஜுனன் மற்றும் வானர வேந்தன் வாலியின் உதவியை நாடினான். அசுரர்களுடன் கார்த்தவீரியார்ஜுனன் பாம்பின் தலையினருகே  சேர,  தேவர்களுடன் வாலி பாம்பின் வாலினருகே சேர்ந்து மந்தர மலையை அப்படியும் இப்படியுமாக இழுத்துக் கடலை இனிதே கடைய யாரம்பித்தனர்.

சாகானிலை தரவல்ல அமிழ்ததின்பாற் கொண்டபற்றினாற் கடைவதை தீவிரபடுத்த, அமிழ்த்தின் வரவை எதிர்நோக்கிட்ட வேளையிற், அவர்க்கெல்லாம் பேரிடியாக கருகருவென விரீயத்துடந் வானலாவ திரண்டு நின்றது ஆலகாலம் எனுந்விடமே. இக்கொடியவிடத்திற் மேலுந் வலுசேர்த்தாற் போல் வாசுகி வலிபொருக்க முடியாமற் நஞ்சினை கக்கியது.  கிணறு வெட்ட பூதம் கிழம்பினாற் போல்,  சற்றும் எதிர்பாராமற் தலைப்பட்ட பேராபத்தினால், சித்தம் கலங்கிட, சிந்தை தடுமாறிட, மரணஓலம் கேட்டிட, கை காலெல்லாம் உதறிட, செய்வதறியாமற் பாலகர் போல் தன்னிலை யெண்ணி மனந்நொந்து கண்ணீர் மல்கினர்.

மரணப்பயங் கொண்ட நெஞ்சினுள் சங்கரன் நினைவு இருளைக் கிழித்துத் தென்படுந் ஒளியினைப் போல்லெழ, சதாசிவா!!! சங்கரா!!! அபயமென அலறி, பாற்கடலினிருந்து கயிலைநாதனின் திருவடியிற் தஞ்சம் புக கயிலைமலைக்கு விரைந்தனர்.

ஆலகாலமோ இவர்கள் செல்லும் வழிநெடுக்க தொடர்ந்துவர, தப்பித்தோம் பிழைத்தோமென மரணோலத்துடன் நந்தியம்பதியின் இருப்பிடத்திற்கு வந்தனர். விடயமறிந்த நந்தியோ அபயமருள பரம்பொருளிந் கடைக்கண்பட அவ்வனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

சேதியறிந்து திகைத்தனர் அங்கிருந்தோர். எப்பணி தொடங்கினும் சிவனருளைப் பெறுந் அந்நெறியினை மறந்த கரணித்தினாலேயே இவ்வபாயத்தில் சிக்கிவிட்டோமென பரம்பொருளின் திருவடியில் சரணடைந்தனர் ஓடிவந்தோர்.

மறுமொழியேதுங் கூறாமற் நாடிவந்தோர் உயிர்காக்க அபயந் தந்தருள மனமிறங்கினார் ஒப்பாரும் மிக்காருமில்லா சிவபெருமான். இந்நிலையில் கடைந்தோரின் உயிரைக்கவர காலனாக கயிலைக்கே வந்தது அவ்வாலகாலம்.

மலைமகள் பதற, அவள் தமையனார் தோள் நடுங்க, சிவனார் முனெதிர்பட்டது அக்கொடியவிடம். நெறிமறந்தாற் துன்பம் அவர்தம் செய்வினையாயினுந், தவறை யொப்புக்கொண்டு சரணடைந்தோர் இன்னல் போக்க, சித்தர்கள் கூடியிருக்குமந்த கயிலைமலையில், சிவகணங்கள்  அஞ்சிய அக்கொடிய ஆலகாலவிடத்தை தன்னிருக் கரங்களால் ஒன்றுத்திரட்டி உருண்டையாக்கி வாயிற்யிட்டு விழுங்கலானார் அம்மாசறுகோன்.

kmalarnews_83819216490 எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் யுடலிற் நஞ்சு சேர்ந்தால் சகல யுயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சிய உமையும், பரந்தாமனும் ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை யிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் சிவனார் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.

இச்சம்பவந் நடக்கின்ற காலநேரத்தே பிரதோஷ காலமென்றனர். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம்.  சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.

இவ்வாறு கயிலையில் சகல தேவ அசுர புடைசுல அபயந்தேடி ஒன்றாகக் கூடியிருக்கின்ற வேளையில் நாமும் கோயினுளிருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலாமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துப் போகுமென்பது உறுதி.

No comments: